பொங்கல்.....
கொஞ்சநாள் முன்
விருப்பமான விழா தமிழனுக்கு...
உழைத்து உருவாக்கிய
நெல்லும் கரும்பும்
பொங்கித் தின்று
புதுப்படம் பார்த்து...
ஏறு தழுவி
வீரத்தழும்பு பெற்று....
வாழ்ந்தது வரலாறு.
இன்று
வீட்டுக்கு வீடு சன்
டன்டனானாக்க டன்...
தொலைக்காட்சி முன்னால்
தொலந்து போனான்.
பொங்கல் சலுகை விலைக்கடைமுன்னால்
தொலந்து போனான்.
நகைகடை முன்னால்
நலிந்து போனான்.
பொங்கல் தின்னத் தடை
கரும்பு தின்னத் தடை
வாழை மா பலா
முக்கனிகளை
தொட்டு மட்டும் பாக்கலாம்
வாழ்க
பொங்கட்டும் பொங்கல்.
வெள்ளி, 14 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)